நாமக்கல் | கோழி தீவன ஆலையில் கஞ்சா செடி பறிமுதல்: போலீஸ் தீவிர விசாரணை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் அருகே கோழி தீவன அரவை ஆலை வளாகத்தில் பயிரிடப்பட்டு இருந்த 3 கிலோ கஞ்சா செடியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் கோழித்தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் ஆலை வளாகத்தில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செடியை போலீஸார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோழித்தீவன ஆலையில் கஞ்சா பயிரிடப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்