சென்னை விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த ட்ராலி பைகளில் அரிய வகை விலங்குகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த இரண்டு ட்ராலி பேகுகளில் இருந்து மலைப்பாம்பு, கட்டுவிரியன், குரங்குகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்

இதுகுறித்து, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி கூறியது: "சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு, தாய்லாந்து நாட்டின்
பாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய பயணி ஒருவரது இரண்டு ட்ராலி பேகுகள் கவனிப்பாரற்று கிடந்தன.

இந்த ட்ராலி பேகுகளை, விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அதில், அரிய வகை விலங்குகள் மறைத்து கடத்தி வரப்பட்டதை கண்டறிந்து விலங்குகளை பத்திரமாக மீட்டனர்.

கவனிப்பாரற்றுக் கிடந்த பைகளில் 45 சுருள் மலைப்பாம்பு, 8 கட்டுவிரியன், 3 சிறிய வகை குரங்குகள், 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன. பத்திரமாக மீட்கப்பட்ட இந்த அரிய விலங்குள் ஏர் ஆசியா விமானம் மூலம் மீண்டும் பாங்காக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த சம்பம் குறித்து மேல்விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE