தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பெண்ணைக் கொலை செய்துவிட்டு திருமணத்துக்கு வாங்கியிருந்த 46 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (40). மலேசியாவில் வேலை செய்கிறார். இவரது மாமியார் கனகாம்பாள் (65), மனைவி வேலுமதி (35), மகன் மூவரசு(12) ஆகிய மூவரும் கண்ணங்கோட்டை வீட்டில் வசிக்கின்றனர். இம்மாதம் கனகாம்பாளின் மூத்த மகள் வழி பேத்தியின் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக சில நாட்களுக்கு முன்பு 46 பவுன் நகைகளை புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந் தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பீரோவைத் திறக்க முயன்றனர். அப்போது கனகாம்பாள், வேலுமதி ஆகிய இருவரும் அந்தக் கும்பலைத் தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அரிவாளால் கனகாம்பாள், வேலுமதி, சிறுவன் மூவரசு ஆகிய 3 பேரையும் வெட்டிவிட்டு பீரோவில் இருந்த 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்நிலையில் நேற்று காலை திருமணத்துக்கான உணவு ஆர்டர் குறித்துப் பேச காவனவயலைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் கனகாம்பாள் வீட்டுக்குச் சென்றார்.
அப்போது வேலுமதி உயிரிழந்த நிலையிலும், மற்றவர்கள் பலத்த காயங்களுடனும் கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தேவகோட்டை போலீஸார் கனகாம்பாள், மூவரசு ஆகிய இருவரையும் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
» உதகையில் இளைஞரிடம் ரூ.2 லட்சம் மோசடி: சமூக வலைதளங்களில் வரும் லிங்க்கை தவிர்க்க அறிவுறுத்தல்
மேலும் வேலுமதி உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தடயங்களை மறைக்க மர்மநபர்கள் வீட்டைச் சுற்றிலும் மிளகாய்ப் பொடியை தூவி இருந்தனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை எஸ்பி (பொ) தங்கதுரை, காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago