கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் தங்கி பயிலும் மருத்துவ மாணவர்களின் வீடுகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏஎஸ்பி ரகுபதி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் மற்றும் காவல் துறையினர் அங்குள்ள சிவகாமி அம்மன் நகரில் நேற்று விசாரணை நடத்தினர். இதில், அண்ணாமலைநகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில், 6 கிலோ கஞ்சா சிக்கியது.
மேலும், அந்த வீட்டில் தங்கியிருந்த, எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களான வாணியம்பாடி நியுடவுன் புதுத்தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (24), சென்னை அடையார் காந்திநகரைச் சேர்ந்த ஹாபீஸ் (23), எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவரான கள்ளக்குறிச்சி ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்த ராகுல் (25) மற்றும் சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில், 6 கிலோ கஞ்சா சிக்கியது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago