பெட்ரோல் குண்டு வீசியதாக திமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

ஈரோடு: நசியனூரில் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் மீது, சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு நசியனூரில், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அர்ஜுனன் (42) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் காலை இவரது ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சித்தோடு போலீஸார், உணவகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், காரில் வந்த ஒருவர், உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. தொடர் விசாரணையில், உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது நசியனூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கோவேந்திரன் (41) என்பது தெரியவந்தது. அர்ஜுனன் உணவகத்திற்கு அருகே உணவகம் நடத்தி வந்த கோவேந்திரன், தொழில் போட்டி காரணமாக இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சித்தோடு போலீஸார், தலைமறைவாக உள்ள கோவேந்திரனைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்