காரில் கஞ்சா விற்பனை: 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி கேடிசி நகர் நீர்தேக்கத் தொட்டி அருகே சந்தேகமான வகையில் நின்ற காரை சோதனை செய்தனர்.

அந்த காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி கேடிசி நகரை சேர்ந்த மாரி கணேஷ் சாமி ஞானராஜ் (38) மற்றும் குமரன் நகரைச் சேர்ந்த முத்துராஜ் மகன் இசக்கிராஜா (29) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 1 கிலோ 125 கிராம் கஞ்சா, கார், 4 செல்போன்கள் மற்றும் ரூ.58,500 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்