திருப்பூர்: இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 5ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை வடக்கு போலீஸார் கைப்பற்றினர்.

விசாரணையில், அந்த இளைஞர் காங்கயம் அடுத்த மேட்டுக்காட்டுவலசை சேர்ந்த பனியன் தொழிலாளி அஜித்குமார் (23) என்பதும், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்ததும் தெரியவந்தது. கடந்தவாரம் சிறையில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களை காணச்சென்ற அஜித்குமார் அதன்பின் வீடுதிரும்பவில்லை என தெரியவந்தது.

அஜித்குமாரின் சிறை நண்பர்களான சூலூரை சேர்ந்த வல்லரசு (24), திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த ஷாஜகான்(25), கணேசன் (26) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை மத்திய சிறையில் இருந்தபோது வல்லரசு உள்ளிட்ட 3 பேர் சிறையில் கஞ்சா புகைத்ததை, சிறைக் காவலரிடம் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக அஜித்குமாரை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. 3 பேரையும் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்