கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே பெண் உட்பட 3 பேரை காரில் கடத்தி ரூ.1 லட்சம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனுராதா (36). இவர் கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ம் தேதி இவரும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோரும் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
சூளகிரி அருகே ஏ.செட்டிப் பள்ளி - ஜாகீர்பாளையம் பகுதியில் கார் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் மறித்தனர். பின்னர், அனுராதா உள்ளிட்ட 3 பேரையும் காரில் இருந்து இறக்கி தாங்கள் வந்த காரில் சேலத்துக்கு கடத்திச் சென்றனர். மேலும், ரூ.5 கோடி கொடுத்தால் விட்டுவிடுவதாக அனுராதாவிடம் தெரிவித்தனர்.
தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை எனவும், ரூ.1 லட்சம் தருவதாக அனுராதா கூறியுள்ளார். இதை தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஏடிஎம் மையம் அருகே ரூ.1 லட்சத்தை பெற்ற கும்பல், 3 பேரையும் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 7 பேரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago