ராமநாதபுரம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்ட நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் (56). இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவருக்கு உடந்தையாக ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்ற செந்தில்வேல்(36) செயல்படுவதாகவும் கடந்த வாரம் ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவினர் நடத்திய விசாரணையில் தலைமைஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நயினார் கோவில் போலீஸார், தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் மற்றும் ஜெயபால் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இவரை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். ஆசிரியர் ஜெயபாலை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago