அரக்கோணம்: சோளிங்கர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த காரணத்தினால், இளம்பெண்ணை இரும்பு ராடால் அடுத்து கொலை செய்த தங்கையின் கணவரை நேற்று காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கவுதமி (32). தம்பதியருக்கு நரசிம்மன் என்ற மகனும், பவானி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், முனுசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். கவுதமி, ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் கம்பெனி யில் பணிபுரிந்து, தனது குழந்தை களுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் கவுதமியின் தங்கை யான பிரியா மற்றும் அவரது கணவர் சஞ்சீவிராயன் (28) ஆகியோர் வசித்து வந்தனர். சஞ்சீவிராயனுக்கும், கவுதமிக்கும் சில மாதங்களாக கூடா நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியாவுக்கு தெரியவந்தது. இதனால், அக்கா, தங்கைக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கவுதமி தனது தங்கை யின் கணவரிடம் பழகுவதை தவிர்த்து வந்தார். ஆனால், அவரை பின்தொடர்ந்து சென்று சஞ்சீவிராயன் பல்வேறு வகையில் தொந்தரது செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து கவுதமி சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் சஞ்சீவி ராயனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை கவுதமி வேலை முடித்து விட்டு தனது தோழிகளுடன் வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சஞ்சீவிராயன் அவர்களை வழி மறித்தார். அங்கு இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து, கவுதமியின் தலையில் பலமாக தாக்கி அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். தடுக்க சென்ற அவர்களின் தோழிகளுக்கும் காயம் ஏற்பட்டது. ரத்த வெள் ளத்தில் சரிந்த கவுதமி அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
» வேலை வாங்கித் தருவதாக உ.பி.யைச் சேர்ந்த கும்பல் மோசடி
» ஏற்றுமதியாளரிடம் ரூ.37 லட்சம் மோசடி: நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது
தகவலறிந்த அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், சோளிங்கர் காவல் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கும், அதே மருத்துவ மனைக்கு கவுதமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சஞ்சீவிராயனை அரக்கோணம் அருகே காவல் துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago