சென்னை: அண்ணாசாலையில் போலீஸ் எனக் கூறி பொறியாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை ஆயிரம் விளக்கு போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் செல்லபாண்டியன் என்ற பொறியாளர் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை டிப்டாப் உடை அணிந்த 3 பேர் வழிமறித்து தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்லபாண்டியனை பார்த்து, உங்கள் மீது சந்தேகம் உள்ளது.
எனவே, விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அவர் வைத்திருந்த லேப்டாப், ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாக கூறி பறித்தனர். அனைத்தையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வந்து எழுதி கொடுத்துவிட்டு திரும்பப் பெற்றுச் செல்லுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த செல்லபாண்டியன் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்று இது குறித்து தெரிவித்தார். அதன் பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களிடம் திருட்டு: சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள 5 மாணவர்களின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டுள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago