உதகை: போக்சோ வழக்கு விசாரணை தொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த முரளி ரம்பா உட்பட 8 போலீஸாருக்கு உதகை மகளிர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராபர்ட் என்பவர், தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அந்த சிறுமி தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மூலமாக, தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராபர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் போக்சோ வழக்கு குறித்து மீண்டும் விரிவாக விசாரணை நடத்தி, உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று கூடலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அங்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உதகை மகளிர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்த விசாரணை முடிவில், 2016-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த முரளி ரம்பா உட்பட 8 போலீஸார், வரும் ஜனவரி 9-ம் தேதி உதகை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடநாடு கொலை வழக்கு விசாரணை தொடர்பாக, முரளி ரம்பாவுக்கு சிபிசிஐடி போலீஸார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago