சென்னை: சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார்(32). உணவு டெலிவரி ஊழியரான இவர், பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராம்குமார் பெட்ஷீட்டால் உடல் முழுவதும் கட்டிக்கொண்டு, தலையில் பாலித்தீன் கவரால் கட்டி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று கொடுங்கையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கணவன், மனைவி மரணம்: புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சக்திவேல் (45), அவரது மனைவி துலுக்கானம் (35) ஆகியோர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று இவர்களது வீட்டில் சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையிலும் இறந்துகிடந்தது தெரியவந்தது.
திருமணமாகி 13 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago