ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் நீதிபதி முன்பு விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (23). இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பேசிய போது செல்வம் வீட்டில் வரதட்சனை கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 2019-ம் ஆண்டு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
இதுகுறித்து சேத்தூர் போலீஸார் போக்ஸோ, வரதட்சனை கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செல்வத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த நீதிபதி முன் தான் மறைத்து வைத்திருந்த அரளி விதையை சாப்பிட்டு செல்வம் தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீஸார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். நீதிபதி முன்பு தண்டனை பெற்றவர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago