கோவை | வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை நீலிக்கோணாம்பாளை யம் அருகேயுள்ள விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாண்மைப் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கோவையில் உள்ள வீட்டில் ரமேஷின் மனைவியும், தாயாரும் வசித்து வருகின்றனர். கடந்த 25-ம் தேதி கோவைக்கு வந்த ரமேஷ், வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் ரமேஷூக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவைக்கு திரும்பிய ரமேஷ், வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 36.75 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்