அதிமுக தலைமை அலுவலகத்தில நிர்வாகியிடம் திருட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தெற்கு ஒன்றியதுணைச் செயலாளர் உச்சிமாகாளி (41) என்பவரும் வந்திருந்தார். கூட்டம் 10 மணிக்குத் தொடங்கிய நிலையில், 11.30 மணியளவில் அவர் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் யாரோ நெரிசலைப் பயன்படுத்தி திருடி உள்ளனர்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸில்் உச்சிமாகாளி புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்