சென்னை: மாம்பலத்தில் நகை, பணத்தை திருடிவிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுபோதையில் படுத்திருந்த 2 பேர் ரயில்வே போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.
சென்னை மாம்பலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு. நேற்று முன்தினம்இரவு, இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் அங்கிருந்த 7 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மதுபோதையில் 2 பேர் படுத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வேபோலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தபோது அதில், 7 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது பிடிபட்டவர்கள் அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த பெயின்டர் சையது அப்துல் கரீம் (37), அவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாடியைச் சேர்ந்த குமார் (29) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மாம்பலத்தில் கணேஷ்பாபு வீட்டில் திருடிவிட்டு அந்த நகையுடன் மது போதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் படுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் மாம்பலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago