விழுப்புரம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொண்டல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (27). கஞ்சா மற்றும் சாராய வியாபாரியான இவர் சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 25-ம் தேதி இரவு கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது 2 பைக்கில் வந்த 4 பேரை கொண்ட கும்பல் தினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த தினேஷை அருகில் இருந்த வர்கள் மீட்டு சீர்காழி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சீர்காழி போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகரன் (21), நாகை மாவட்டம் கழுக்காணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அம்மாயி என்கிற பாரதி (27) ஆகியோர் நேற்று விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராதிகா முன்பு சரணடைந்தனர்.
இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். அதன் பேரில் இரு வரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago