பெரம்பலூர் | விளையாட்டு விடுதியில் பாலியல் தொந்தரவு: டேக்வாண்டோ பயிற்சியாளர் கைது

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் வீரபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தர்மராஜன்(33). இவர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, டேக்வாண்டோ பயிற்சி அளிக்க தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தர்மராஜன் மீது அண்மையில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் தலைமையிலான குழந்தை நலக் குழுவினர் விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, தர்மராஜன் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் டிச.7-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த தர்மராஜனை, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, பெரம்பலூருக்கு நேற்று அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்