செங்கல்பட்டு: செங்கை மாவட்டத்தில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 51 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் காவல் ஆணையாளர் காமினி தலைமையில், தாம்பரம் மாநகர துணை ஆணையாளர் சி.பி.சக்கரவர்த்தி மற்றும் தடய அறிவியல் துறை இணை இயக்குநர் அமுதா ஆகியோர் கொண்ட குழுவினரை நியமித்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதன்பேரில், மேற்கண்ட குழுவினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சிட்லம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்த 40.160 கிலோ கஞ்சா, கண்ணகி நகர் போலீஸார் பறிமுதல் செய்த 8.756 கிலோ, செம்மஞ்சேரி போலீஸார் பறிமுதல் செய்த 2.085 கிலோ கஞ்சா என மொத்தம் 51 கிலோ கஞ்சாவை மேற்கண்ட குழுவினர் முன்னிலையில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி தென்மேல் பாக்கம் கிராமத்தில் உள்ள மருத்துவ கழிவுகள், போதை பொருட்கள் அழிக்கும் தனியார் நிறுவனத்தில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் அவை எரித்து அழிக்கப்பட்டன.
» மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு? - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
» கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.23 லட்சம் அபராதம்
மேலும், பிற காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா விரைவில் அழிக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago