சென்னை: என்ஐஏ அதிகாரிகள் என கூறி வியாபாரியிடம் ரூ.2.30 கோடி பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மண்ணடி, மலையப்பன் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா (36). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் என கூறி கும்பல் ஒன்று ரூ.2.30 கோடியை பறித்துக் கொண்டு தப்பியது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் விசாரித்தனர். அப்துல்லாவிடம் பணத்தைபறித்துச் சென்றதாக பாஜக பிரமுகர் வேலு என்ற வேங்கை அமரன் உட்பட 6 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி சரணடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒருவர்கைது செய்யப்பட்டார்.
தற்போது, மேலும் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 1.65 கோடிபணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago