குண்டூர்: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை போலீஸார் எரித்து அழித்தனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர், விஜயவாடா, கோதாவரி மாவட்டங்களில் இந்த ஆண்டு மொத்தம் 457 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கஞ்சாவை, காக்கிநாடா மாவட்டம், கிர்லம்பூடி பகுதியில் போலீஸார் தீயிட்டு எரித்தனர்.
இது குறித்து ஏலூரு டிஜிபி பாலராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் மேற்கண்ட 4 மாவட்டங்களில், கஞ்சா கடத்தல் தொடர்பாக, போதை தடுப்பு சட்டம் பிரிவின் கீழ், 457 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 379 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 1,408 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 16 கோடி மதிப்புள்ள இந்த 65 டன் கஞ்சாவை எரிக்க நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று, அவற்றை முற்றிலுமாக எரித்தோம். இதற்கான வீடியோ பதிவையும் விரைவில் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை கும்பல் கஞ்சா போன்ற போதை பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதை விசாரணை மூலம் அறிந்தோம். இனி அப்படி விற்பனை செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கிறோம் என டிஜிபி பாலராஜு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago