தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரைச் சேர்ந்தவர் நேசமணி (60), எல்ஐசி முகவர். இவரது மனைவி உஷா பாப்பா. இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூரில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
நேற்று அதிகாலையில் பாவூர்சத்திரத்தை அடுத்த குருசாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு நேசமணி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சென்றனர். ஆராதனை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.
யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 85 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று பார்வையிட்டனர். விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் 2 இடங்களில் கைவரிசை: ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (57). ஆலங்குளம் காந்தி நகரில் வசித்து வரும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 3 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதே பகுதியைச் சேர்ந்த பொன்சிவராமச்சந்திரன் (40) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டிலும் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago