சென்னை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு, சென்னை வேப்பேரி பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, 46 வயதான அவரது உறவினர் கடைக்கு வரவழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவுற்ற சிறுமி, இதுகுறித்து தனது சித்தியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், சிறுமியின் உறவினரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago