புதுச்சேரி | சொந்த குழந்தையை போதைப்பொருள் நுகரவைத்து பிச்சை எடுக்கவைத்த தந்தை கைது

By அ.முன்னடியான்

புதுச்சேரி: பஞ்சர் ஒட்டும் பேஸ்ட் மூலம் குழந்தைகளுக்கு போதை ஏற்றிய நபரை போலீஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர் ஒருவர் தன்னுடன் இருந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பஞ்சர் ஒட்டும் பேஸ்ட் மூலம் போதை ஏற்றுவதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாஸ்பேட்டை நரிகுறவர் காலனியைச் சேர்ந்த சிரஞ்சீவி(33) என்பவர் குழந்தைகளுக்கு பஞ்சர் ஒட்டும் பேஸ்ட் மூலம் போதை ஏற்றியது உறுதிப்படுத்தப்பட்டது. அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், சிரஞ்சீவி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை அருகே தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸார் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளுக்கு போதை ஏற்றி, பேப்பர், பாட்டில் சேகரிக்கவும், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுக்கவும் பயன்படுத்தி அதன் மூலம் வருமானம் பார்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் முறையே 6,8,11 வயதுகள் உள்ள 5 குழந்தைகளை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிரஞ்சீவியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்