சென்னை: சென்னை திருவிக நகர், நீலம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் நேற்று முன்தினம் துரைப்பாக்கம் பகுதியில் ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை பொதுமக்கள் பிடித்து துரைப்பாக்கம் போலீஸாரிடம்ஒப்படைத்தனர். அவரை போலீஸார் விசாரித்தனர். அப்போது தான் திருடிய செல்போனை தனதுகூட்டாளியிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது மனைவிகவுசல்யா மூலம் செல்போன்துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், போலீஸார் தினேஷ் குமாரை விடுவித்தனர். வீடு திரும்பிய தினேஷ் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தினேஷ் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திடீரென வாந்திஎடுத்து மயங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர்உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
போலீஸார் தாக்கியதாலேயே தினேஷ் குமார் இறந்துள்ளார் எனக்குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் திருவிகநகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மரணமடைந்த தினேஷ் குமாரின் சகோதரர் செந்தில் குமார் திருவிக நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ``செல்போன் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற துரைப்பாக்கம் போலீஸார் தினேஷ் குமாரை தாக்கியுள்ளனர். இதுவே மரணத்துக்குக் காரணம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனப் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தினேஷ் குமார் மரணம் குறித்து எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட் ஜெகதீஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago