சென்னை | அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடி: ஆரூத்ரா கோல்டு நிறுவன மேலாளர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி,ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்,அந்த நிறுவனத்தில் ரூ.2,400 கோடிவரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் உறுதியளித்தபடி பணம்தரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தொடர்புடைய 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, கடந்த மே 20-ம் தேதி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பாஸ்கர், மோகன்பாபு, பேச்சி முத்துராஜ் என்ற ரபீக், பட்டாபிராம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், மேலாளர் பதவியில் இருந்த கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் (26) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சென்னை அழைத்துவந்த போலீஸார், நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்