சென்னை | 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 சித்தப்பாக்கள், தாத்தாவுக்கு ஆயுள் சிறை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியின் 13 வயது மகள், தனது தாத்தாவின் பராமரிப்பில் படித்து வந்தார்.

கடந்த 2016 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில் அந்த சிறுமியை அவரது தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேர்தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீ ஸார் 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சிறுமி யின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சித்தப்பாவின் மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்