திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தபோவனம் எதிரே முட்புதரில் கடந்த 8-ம் தேதி பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் சிசு கிடந்தது.
தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகள் அங்கு சென்று குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த சிசுவை வீசி சென்றது, எலமனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலைவாணி(19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையறிந்த கல்லூரி மாணவி விஷம் குடித்த நிலையில்வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில்உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றதால் தந்தை செல்வமணி(50), அத்தை மல்லிகா(55) ஆகியோர் தன்னை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக நீதிபதியிடம் கலைவாணி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கலைவாணியின் தந்தை செல்வமணி, அத்தை மல்லிகா ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago