கையும் களவுமாக பிடிபட்ட போது லஞ்ச பணத்தை விழுங்கிய போலீஸ் அதிகாரி கைது

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் ஃபரீதா பாத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா உலா. இவர் ஃபரீதாபாத் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த ஷம்பு நாத் என்பவர், தனது எருமை மாடு காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அதை கண்டுபிடித்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை மகேந்திரா விடம், ஷம்புநாத் லஞ்சமாக கொடுத்தார். அத்துடன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் ஷம்பு நாத் புகார் கொடுத்தார். போலீஸாரின் திட்டப்படி மீதி பணத்தை மகேந்திராவிடம் கொடுக்க ஷம்புநாத் சென்றார். அப்போது மகேந்திராவை, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

உடனே மகேந்திரா உலா, அந்தப் பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயன்றார். ஆனால் லஞ்ச ஒழிப்புப் போலீ ஸார், மகேந்திரா உலாவின் வாயில் கைவிட்டு அந்தப் பணத்தை விழுங்க விடாமல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் முழுவதையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகேந்திரா உலா கைது செய்யப்பட்டார்.

லஞ்சப் பணத்தை அவர் விழுங்க முயன்ற வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்