மதுரை: மதுரை மாவட்டம், கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன்(28). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் கைது செயப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்ட அவர், நவ., 21ல் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சமயநல்லூர் பகுதியில் மற்றொரு மூதாட்டியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமயநல்லூர் மகளிர் போலீஸார் அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இருப்பினும், இவ்வழக்கில் அவர் , ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையில், மணிமாறன் ஒரே குற்றச்செயலை திரும்ப, திரும்ப செய்வதாக கருதி, அவருக்கு ஏற்கனவே கொலை வழக்கில் வழங்கிய ஜாமீனையும் ரத்து செய்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, மூதாட்டியை கொன்ற வழக்கிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஒரே குற்றத்தை தொடர்ந்து செய்தால் முந்தைய ஜாமீன் ரத்து செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
59 mins ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago