சிவகங்கை: சிவகங்கை அருகே ஆன்லைன் லிங்கை தொட்டதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (33). இவர் படமாத்தூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவரது மொபைலுக்கு வந்த ஆன்லைன் லிங்கை தொட்டுள்ளார்.
அதன்பிறகு, அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அவரது வங்கி கணக்கில் இருந்த தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் வங்கியில் விசாரித்தபோது, வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டு இருந்த அவரது மொபைல் எண்ணை மாற்றி, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஜெயின் என்பவர் பணத்தை எடுத்தது தெரியவந்தது.
இது குறித்து கோடீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago