பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பஸ்ஸில் 423 கிலோ குட்கா கடத்திய 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரி அருகே நேற்று அதிகாலை ஒரு வால்வோ பேருந்தில் இருந்து பெட்டிகளை 2 கார்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோந்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், 423 கிலோ 120 கிராம் குட்கா பொருட்கள் அடங்கிய 7 பெட்டிகளை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கார்களில் ஏற்றுவது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்து, 2 கார்கள், குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட வால்வோ பேருந்து ஓட்டுநர் ஆந்திர மாநிலம் பாலாஜி பீடா மண்டலத்தைச் சேர்ந்த தோட்டாபாண்டே நாராயணன், நடத்துநர் லிங்கலா கடப்பாவைச் சேர்ந்த வெங்கடராமி ரெட்டி, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வல்லப்புரம் தாடிக்கொண்டா ராஜசேகர், பேருந்து உரிமையாளர் சுனில் முத்தையா ரெட்டி, பெங்களூரு சந்துரு, செல்லூர் மீனாட்சிபுரம் அருண்குமார், கோசாகுளம் சிவசக்தி நகர் டேவிட் தினகரன், ராஜபாளையம் ராஜேந்திரன், சிவா ஆகிய 9 பேர் மீது சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் தோட்டாபாண்டே நாராயணன், வெங்கடராமி ரெட்டி, ராஜசேகர், அருண்குமார், டேவிட் தினகரன், ராஜேந்திரன் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்