கொடைக்கானலில் தென்காசி இளைஞர் கொலையில் 5 பேர் கைது: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் தென்காசியைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் சூர்யா(30). வீடியோ எடிட்டிங் படித்துவிட்டு, சென்னையில் பணிபுரிந்தவருக்கு ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் கருத்து வேறு பாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில், சென்னையில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த சூர்யா, அங்கு லாய்ஸ்ட் ரோடு பகுதியில் தனியார் காட்டேஜில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவேதா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் 4 பேர் சூர்யாவை பார்க்க வந்து அவருடன் தங்கினர். அப்போது சூர்யா கீழே விழுந்து மயங்கி விட்டதாகக் கூறி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

உறவினர்கள் போராட்டம்: இதையடுத்து கொடைக்கானல் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யாவின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உறவினர் கள், நண்பர்கள் சூர்யா இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அப்போது, சுவேதா, மற்றும் அவரது நண்பர்கள் சூர்யாவை கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இந்நிலையில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் மதுரையைச் சேர்ந்த கவுதம் (31), திருநெல்வேலியை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (27), கொடைக்கானலை சேர்ந்த பராந்தக சோழன் (25), அகில் அகமது (25) ஆகியோர் சூர்யாவை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்