கோவை: கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர்,கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகார் மனுவில், “கடந்த மாதம் 23-ம் தேதி எனது டெலிகிராம் செயலிக்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் லிங்க் வந்தது.
அந்த லிங்கில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினேன். மறுமுனையில் பேசிய நபர், ‘நீங்கள் எங்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து, நிறுவனம் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவிட்டால் உங்களுக்கு அதற்குரிய தொகை தொடர்ந்து வழங்கப்படும்’ என்றார்.
இதை நம்பிய நான் அந்நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.32 லட்சத்து 23 ஆயிரத்து 909 தொகையை அனுப்பினேன். ஆனால், தொகை அனுப்பி நீண்ட நாட்களாகியும் எந்த வருமானமும் வரவில்லை. அதன் பின்னரே மர்ம நபர்கள் மோசடி செய்து பணத்தை பறித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸார், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago