ஆவடி | முதலீடு பணத்தை திருப்பி தராததால் மருத்துவமனை உரிமையாளரை கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஆவடி: முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காததால், மருத்துவமனை உரிமையாளர் கடத்தப்பட்டது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, அம்பத்தூர், லெனின் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (54). இவர், ஆவடி அருகே திருமுல்லைவாயல், குளக்கரை சாலையில், மருத்துவமனை ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, சுந்தரமூர்த்தி மருத்துவமனையை விரிவுப்படுத்த முதலீட்டாளர்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளார். அதன் விளைவாக, சேலத்தில் வசிக்கும் நீலமேகம் என்பவர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வைஷாலி (28) என்ற தனியார் நிறுவன ஊழியர் சுந்தரமூர்த்தியிடம் அறிமுகமாகி ரூ.7 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால், சுந்தரமூர்த்தியால் வைஷாலி செய்த முதலீடுக்கான லாபத்தை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, வைஷாலி தான் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சுந்தரமூர்த்தியிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், நேற்று முன்தினம் இரவு வைஷாலி, தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரான பள்ளிக்கரணையைச் சேர்ந்த பாரதிதாசன், தன் அக்கா கணவரான பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த சிவா, பல்லாவரத்தைச் சேர்ந்த தேவகுமார் ஆகிய 3 பேருடன் காரில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர், அங்குள்ள டீ கடைக்கு சுந்தரமூர்த்தியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. அதன் விளைவாக, வைஷாலி உள்ளிட்ட 4 பேரும், சுந்தரமூர்த்தியை தாக்கி காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி மகள் விஷ்ணுபிரியா அளித்த புகாரின்பேரில், திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பல்லாவரத்தில் தலைமறைவாக இருந்த வைஷாலி உள்ளிட்ட 4 பேரை, 3 மணி நேரத்தில் கைது செய்து, அவர்களிடமிருந்து சுந்தரமூர்த்தியை மீட்டனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்