பிஹார் | டெலிகாம் நிறுவன ஊழியர்கள் போல நடித்து செல்போன் டவரை திருடி சென்ற கொள்ளையர்கள்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒரு செல்போன் டவரை முழுவதுமாக திருடிக் கொண்டு சென்றுள்ளனர் கொள்ளையர்கள். டெலிகாம் நிறுவன ஊழியர்கள் போல நடித்து அதனை முழுவதுமாக கழட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றுள்ளனர். இந்த செல்போன் டவரின் மதிப்பு சுமார் 19 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பாட்னாவில் உள்ள கர்ட்னிபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது. கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் டவரை கழட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த டவர் அமைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளர் அது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது தங்களை டெலிகாம் நிறுவன ஊழியர்கள் என பொய் சொல்லி உள்ளனர் கொள்ளையர்கள். மேலும், ஒப்பந்த காலம் முடிந்த காலத்தால் எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதை லாரி மூலம் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்ட டவர் ஏன் சரியாக வேலை செய்யவில்லை என அந்த டவரை நிறுவிய அசல் டெலிகாம் நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போதுதான் டவர் திருடப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 25 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிஹாரில் ரயில் எஞ்சின் திருடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் உதிரி பாகங்கள் சுமார் 13 சாக்கு மூட்டைகளில் இரும்பு கடையில் கண்டெடுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்