சென்னை: சினிமா கூத்து பட்டறையில் நடிகர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர், சென்னை எம்ஜிஆர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகன், சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவருக்கும் சக மாணவர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்தரப்பு மாணவர், சக நண்பர்கள் என 12 பேருடன் சேர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவரின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். இதையடுத்து 12 மாணவர்களையும் வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒன்றுசேர்ந்து கடந்த 21-ம் தேதி சம்பந்தப்பட்ட மாணவனை தாக்கியுள்ளனர். மேலும், பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த மாணவர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக வடபழனி சரக காவல் உதவி ஆணையர் பாலமுருகன், கே.கே.நகர் காவல் ஆய்வாளருடன் சாதாரண உடையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அதை அறிக்கையாகத் தயார் செய்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago