சென்னை | நடிகர் வீட்டில் 200 பவுன் கொள்ளை: 3 பேர் நேபாளத்தில் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நடிகர் ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன் (54). ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 10-ம் தேதி வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் அவரது மனைவி ராஜி(48) மட்டும் தனியாக இருந்தார். அப்போது, பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்த 3 பேர், ராஜியை கட்டிப் போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆர்.கே. வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தை சேர்ந்தகாவலாளி ரமேஷ், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி, நேபாளத்தில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரதுகூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்துநகைகள் மீட்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்