ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பணம், நகையை திருடி விட்டு வீட்டுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? மின்கசிவு காரணமாக தீ பற்றியதா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (73), தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி (64). தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் திருத்தணியில் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி தனது மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் திருத்தணி புறப்பட்டு சென்றார். கந்தசாமி, இரவு காவலர் பணிக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே நேற்று காலை ராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்து புகை கசிந்தது. இதைப்பார்த்த ராணி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைத்து, அதிலிருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு, தீ வைத்து விட்டு தப்பிச்சென்றாக தெரிகிறது.
இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். மர்ம நபர்கள் கைவரிசை என தெரியவில்லை என தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து சிப்காட் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago