சென்னை: காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.3 லட்சத்து விற்பனை செய்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சந்திரசேகர் (26). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். திருமணம் குறித்து பேசியபோது இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை தி.நகர் சீரணிபுரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்தால் உறவினர்களும், நண்பர்களும் வேறு மாதிரி பேசுவார்கள். எனவே, நாம் இந்த குழந்தையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் காதலியிடம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் சம்மதிக்கவில்லையாம்.
ஆனால், காதலியை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து, ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிக்கு, இடைத்தரகர் மூலம் ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை சில மாதங்களுக்கு முன்னர் விற்றுள்ளனர். இருந்தாலும், அப்பெண் தனது குழந்தைஞாபகமாகவே இருந்துள்ளார். விற்ற குழந்தையை மீண்டும் வாங்கி வரும்படி சந்திரசேகரிடம் அடிக்கடி கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகர் காதலியைப் பிரிந்து, வேறு ஒரு பெண்ணை திருமணம்செய்து கொண்டுள்ளார். பெற்ற குழந்தை விற்கப்பட்டதோடு, காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிரிந்து சென்று விட்டதால் அப்பெண் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.
இதுகுறித்து, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, அப்பெண்சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.விசாரணை நடத்திய நீதிபதிகள், குழந்தையை மீட்டு, தாயிடம் கொடுப்பதோடு குழந்தையை விற்பனை செய்தவர்கள், துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தை ஈரோட்டைச் சேர்ந்த, தம்பதிக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த தம்பதி குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வருவதால் உடனடியாக குழந்தையை அவர்களிடமிருந்து பிரித்தால் குழந்தை பாதிக்கப்படும் என்பதால் குழந்தையைத் திரும்ப ஒப்படைக்க போலீஸார் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
மேலும், குழந்தையை விற்பனை செய்ததாக சந்திரசேகர், இடைத் தரகராகச் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எனக் கூறப்படும் பிரான்சிஸ் (41),ஈரோடு மாவட்டம், ஒட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (46) ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago