தஞ்சை | முந்திச் செல்வதில் போட்டா போட்டி - தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் நடத்துநர், ஓட்டுநர்கள் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: முந்திச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில், தஞ்சாவூரில் ஒருதனியார் பேருந்து மீது மற்றொரு தனியார் பேருந்தை மோதிய சம்பவத்தில் நடத்துநர், ஓட்டுநர்கள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அந்தப் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் காலை 5 நிமிட இடைவெளியில் இரு தனியார் பேருந்துகள் புறப்பட்டன. அப்போது இரு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. வழியில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு இருதனியார் பேருந்துகளும் வந்தன.அப்போது முன்னால் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் ஆவேசமாகி, பேருந்தை பின்னோக்கி இயக்கி, பின்னால் நின்ற மற்றொரு பேருந்து மீது மோதினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்துசமூக வலைதளங்களில் பதிவிட்டதால், அந்த வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இரு தனியார் பேருந்துகளையும் வட்டார போக்குவரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் பறிமுதல் செய்து, ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தினார்.

பின்னர், அந்தப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு, அவற்றின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து பேருந்துகளின் ஓட்டுநர்களான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன்(33), ஒரத்தநாட்டைச் சேர்ந்த ராஜ்குமார்(28), நடத்துநரான பாபநாசத்தைச் சேர்ந்த ராஜா(35) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

மேலும்