திருப்பத்தூர்: சேலம் மாவட்டம் பன்னாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன குமாரன்(53).இவர், திருப்பத்தூர் ரயில் நிலையம் பிரதான சாலை பீரான் லைன் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி திருப்பத்தார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(கணக்கு) பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்,கடந்த சனிக்கிழமை மாலை பணி முடிந்து பீரான் லைன் தெருவில் உள்ள வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றார். இதனையடுத்து நேற்று காலை ஆட்சியரின் அலுவலகத்துக்கு மோகன குமாரன் வராததால், அவரது செல்போன் எண்ணுக்கு அலுவலக ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று பார்த்த போது, மோகன குமாரன் அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர்,அங்கு சென்று மோகன குமாரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன குமாரன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது அவர் இறப்புக்கு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மோகன குமாரனுக்கு சாந்தி என்ற மனைவியும், கவின்(12)என்ற மகனும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago