கோவை: கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தது தொடர்பாக யூ டியூபர் கிஷோர் கே.சாமி மீது கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த முபின் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத் கூட்டமைப்பினர் மறுப்பு தெரிவித்தனர். கடைசியில் மனிதநேய அடிப்படையில் உடலை அடக்கம் செய்ய அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யூ டியூபர் கிஷோர் கே.சாமி என்பவர் சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ளதாக கிஷோர் கே.சாமி மீது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்ட பிரிவு 153-ன் கீழ் (கலகம் செய்ய தூண்டுதல்) வழக்குபதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago