ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடா னை அருகே சித்தமங்கலத்தைச் சேர்ந்த போஸ் என்பவரது மகள் பிரியதர்ஷினி(23). இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் வெளிநாட்டு வேலைக்காக ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்தார். அவரது மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.22 அன்று மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பஷில் போக் என்பவர் தனது மனைவியை வீட்டிலிருந்தே கவனிக்க செவிலியர் தேவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நம்பி அவர் தெரிவித்த படி, செவிலியர் பணிக்காக அவரது வங்கிக் கணக்குக்கு பிரியதர்ஷினி தனது நண்பர் மதன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,40,379 அனுப்பியுள்ளார். அதன்பின் மேலும் ரூ.1.08 லட்சம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதனால் சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி தான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பும்படி தகவல் அனுப்பியுள்ளார்.
ஆனால் அந்நபர் பணத்தை அனுப் பவில்லை. பிரியதர்ஷினி, இது தொடர்பாக தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago