ராமநாதபுரம் | ரூ.18.34 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.18.34 கோடி மதிப்பிலான 35.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காரில் இருந்த 3 பேரை பிடித்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்