பள்ளி வாயிலில் கடத்தப்பட்ட மாணவன்: சமயோசிதமாக தப்பினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் அரவிந்த் சர்மா. இவரது 12 வயது மகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவன் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல,நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, தான் எப்போதும் செல்லும் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார்.

அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர், மாணவனைத் தாக்கி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கடத்தி சென்றுள்ளனர். ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி சிக்னலில்நின்றுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மாணவன், ஆட்டோவிலிருந்து தப்பி அருகிலிருந்த பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்த போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர், மாணவன் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த மாணவனின் பெற்றோர் அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். மகன் கடத்தப்பட்டது குறித்து அரவிந்த் சர்மா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவனை கடத்தியது யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்