மும்பை | ஆன்லைனில் ரூ.1000-க்கு இனிப்புகளை ஆர்டர் செய்த பெண்... இழந்ததோ ரூ.2.4 லட்சம்!

By செய்திப்பிரிவு

மும்பை: ஆன்லைன் மூலம் ரூ.1000 மதிப்பிலான இனிப்புகளை பெண் ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் இழந்ததோ சுமார் ரூ.2.4 லட்சம். அவர் எப்படி தனது பணத்தை இழந்தார் என்பதை பார்ப்போம்.

ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையில் மோசடி நபர்கள் தங்களது கைவரிசையை காட்டிய வண்ணம் உள்ளனர். நாள்தோறும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் மும்பை நகரை சேர்ந்த பூஜா ஷா. 49 வயதான அவர் மும்பை நகரில் அந்தேரி பகுதியை சேர்ந்தவர். தீபாவளியை முன்னிட்டு உணவு டெலிவரி செயலியை பயன்படுத்தி ரூ.1000 மதிப்பிலான இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆனாலும் தனது ஆர்டருக்கான தொகையை அவரால் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து இணையம் மூலம் சம்பந்தப்பட்ட கடையின் மொபைல் எண்ணை எடுத்து, அதற்கு போன் கால் செய்துள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசியவரிடம் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். தான் கடைக்காரர் உடன்தான் பேசுகிறோம் என எண்ணி பூஜா அந்த கார்டின் விவரங்களை கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கிரெடிட் கார்டிலிருந்து சுமார் 2,40,310 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பூஜா, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் சுமார் 2,27,205 ரூபாய் வேறு வங்கி கணக்குக்கு மாற்றாதபடி போலீசார் முடக்கி உள்ளதாக தெரிகிறது.

ஓடிபி உள்ளிட்ட விவரங்கள் ஒருபோதும் பிற நபர்களுடன் கார்டு பயனர்கள் பகிர்ந்து கொள்ளவே கூடாது. இந்த விஷயத்தில் பயனர்கள் கொஞ்சம் அலர்ட்டாக இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்