கூடலூர்: கூடலூரை அடுத்த புத்தூர்வயல் பகுதியைச் சேர்ந்த தம்பதி மோகன் (59), உஷா (53). கடந்த19-ம் தேதி கூடலூரில் ஒரு திருமணத்துக்கு சென்ற உஷா, அதன் பின் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது சகோதரர் சத்யன் அளித்த புகாரின்பேரில், கூடலூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக, சந்தேகத்தின்பேரில் மோகனிடம் போலீஸார் விசாரணை நடத்தி யுள்ளனர். அவரது வீட்டை சோதனையிட்டபோது, சில இடங்களில் ரத்தக் கறை இருந்துள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் உஷாவை கொலை செய்ததாக மோகன் தெரிவித்துள்ளார்.
கணவர் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணத்துக்கு சென்று தாமதமாக வந்தது குறித்து கேட்டபோது, இருவரிடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மோகன் தாக்கியதில் உஷா இறந்துள்ளார். சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி காரில் எடுத்துக்கொண்டு, இரவு நேரத்தில் தேவர்சோலை சாலையோரத்தில் புதர் நிறைந்த பகுதியில் வீசி சென்றது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று உஷாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மோகனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago