கொல்லப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை? - வதந்தி பற்றி கேரள போலீஸார் விளக்கம்

By செய்திப்பிரிவு

கொச்சி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரில் பாரம்பரிய மருத்துவராக இருப்பவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷிகாப் என்ற முகம்மது ஷபி முகநூல் மூலம் அறிமுகமானார்.

மந்திரவாதி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் எனக் கூறி, பகவல் சிங்கின் வீட்டுக்கு 2 பெண்களை அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பகவல் சிங், லைலா, ஷபி ஆகிய முவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரபலி கொடுக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணின் உடலை 56 துண்டுகளாக வெட்டி பகவல் சிங்கின் வீட்டு தோட்டத்தில் புதைத்தது விசாரணையில் தெரியவந் துள்ளது. இதனால் உடல் உறுப்புகளை விற்பதற்காக அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.

இதுகுறித்து கொச்சி காவல் ஆணையர் சி.எச்.நாகராஜு கூறும்போது, “நரபலி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஷபி, பல்வேறு கதைகளை கூறியுள்ளார். இவற்றின் உண்மைத்
தன்மை குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர். அதேநேரம், உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடை
பெற்றிருக்கலாம் என சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை. கொலை செய்யப்பட்டதை நிரூபிப்பதும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிவதுமே எங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்